துருக்கியில் நெடுஞ்சாலையொன்றில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் கிட்டத்தட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு துருக்கியின் மெர்சினில் உள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக பேருந்து ஒன்று எதிர் பாதையில் நழுவி இரண்டு கார்கள் மீது மோதியதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் மேலும் 39 பேர் காயமடைந்துள்ளனர்.
மூன்று வாகனங்களிலும் லொறி ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
சம்வம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்
- யாழ் வடமராட்சி இளைஞன் பிரான்ஸில் தற்கொலை!
- இன்றைய இராசிபலன்கள் (30.04.2025)