தெற்கு பிலிப்பைன்சில் (Philippines) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நிலநடுக்கமானது பிலிப்பைன்சில் உள்ள சுல்தான் குடாரத் மாகாணத்தில் இன்று (11.7.2024) உள்ளூர் நேரப்படி காலை 10.13 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
விமானப் பயணத்தின் போது மாரடைப்பு !உயிரிழந்த இலங்கைப் பெண்
நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.5 ஆக இருந்து அதன் பின்னர் 7.1 ஆக உயர்ந்ததாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடலோர நகரமான பாலிம்பாங்கிலிருந்து தென்மேற்கே 133 கிலோமீட்டர் தொலைவில் 722 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறுகண்டி ஏ9 வீதி விபத்தில் ஒருவர் பலி!! பலர் படுகாயம்!
மேலும் மிண்டானாவோவ் நகரிலும், டவாவோ, ஆக்சிடெண்டல், டாவோ ஓரியண்டல், சாராங்கனி, டாவோ டி ஓரோ, டாவோ டெல் நோர்டே மற்றும் கோடாபாடோ ஆகிய இடங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை என்பதுடன் சுனாமி எச்சரிக்கை (Tsunami warning) எதுவும் விடுக்கப்படவில்லை.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததையடுத்து அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
- பிறந்தநாள் வாழ்த்து சண் அவர்களின் (04.05.2025, ஜெர்மனி)
- நாட்டில் ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
- அக்னி நட்சத்திர நாளில் செய்ய வேண்டியவை
- கிளிநொச்சி நாகபடுவான் குளத்தில் மூழ்கி 14 வயது மாணவன் பலி!
- தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி