யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த பெறுமதியான பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வீடு தீ பற்றி எரிவதனை கண்ட அயலவர்கள் தீயினை அணைக்க முற்பட்டதுடன் , மாநகர சபை தீயணைப்பு படையினருக்கும் அறிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கு காரணம் கண்டறியப்படாத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்
- யாழ் வடமராட்சி இளைஞன் பிரான்ஸில் தற்கொலை!
- இன்றைய இராசிபலன்கள் (30.04.2025)