• Fr.. Mai 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெள்ளிக்கிழமைகளில் இந்த விடயங்களை செய்யக்கூடாது.

Jan. 24, 2025

பொதுவாக வெள்ளிக் கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாக இருக்கிறது. வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்யவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமையில் பலர் தங்களது வீடுகளில் பூஜை செய்வது வழக்கம். ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்கிரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம் என்பது நம்பிக்கை.

வாரத்தில் இருக்கும் 6 நாட்களில், வீட்டில் விளக்கு ஏற்றாவிட்டாலும், இந்த வெள்ளிக்கிழமையில் மட்டுமாவது வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுவது உண்டு. இறையருள் நிறைந்த இந்த வெள்ளிக்கிழமையில் நாம் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள் என்னென்ன என்று நாம் இங்கு பார்ப்போம்.

விரதம் இருக்கும் முறை

வெள்ளி கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்ததும், விரதம் இருப்பவர்களும் நீராடிவிட்டு வந்து வீடு முழுவதும் சாம்பிராணி போட்டு தெய்வீக மணம் கமழச் செய்ய வேண்டும். பிறகு லட்சுமிதேவியின் படத்திற்கோ அல்லது விக்கிரகத்திற்கோ மலர்களால் அர்ச்சனை செய்வதுடன், தீபாராதனைக் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.  

ஒரு நாள் முழுவதுமாக உபவாசம் இருக்க முடியாதவர்கள், பால், பழம் போன்றவற்றை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். விரதம் முடிந்ததும் சுவாமியின் படத்திற்கு சிறப்பு பூஜை செய்து விரத்தை முடித்துக் கொள்ளலாம்.

வெள்ளிக் கிழமையில் செய்ய வேண்டியவையும் கூடாதவையும்

1. கடைகளில் பெரும்பாலும் குபேர விளக்கு கிடைக்கிறது. வெள்ளிக் கிழமைகளில் தாமரை திரி வைத்து அதில் விளக்கேற்றி வந்தால் குபேர அருள் கிடைக்கும். வெள்ளிக் கிழமை சுக்கிர ஹோரையில் பூஜை அறையில் அமர்ந்து நமக்கு என்ன தேவையோ அதை வேண்டி பிரார்த்தனை செய்தால், எண்ணியது நடக்கும் என்பது ஐதீகம்.  

2. தாமரை இதழ் கொண்டு மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து மந்திரம் கூறினால் செல்வம் பெருகும்.

3. வெள்ளிக் கிழமை மாலை வேளையில் வீடை சுத்தம் செய்து சாம்பிராணி போட வேண்டும். அதனால் வீட்டில் கெட்ட சக்திகள் இருந்தால் விலகி நேர்மறை ஆற்றலை அதிகரிக்க முடியும்.

4. லட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமையன்று உப்பை நாம் வாங்கினால் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு, நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து இருக்கும் என்பது நம்பிக்கை.

வெள்ளிக்கிழமைகளில் இந்த விடயங்களை செய்யக்கூடாது தெரியுமா? | Vellikilamai Viratham Seiya Vendiyavai Kudathavai
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed