கடந்த ஆண்டு இலங்கையில் இருந்து கனடா சென்றோர் எண்ணிக்கை மிக அதிகம் என்றே சொல்ல வேணடும், அதிலும் விசிட்டர் விசாவில் யாழ்ப்பாணம் உட்பட வட ப்குதியில் இருந்து பலர் கனடா சென்றுள்ளனர்.
இந்நிலையில் கனடாவுக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை முன்னெப்போதும் இல்லாத அளவில் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு மில்லியன் கணக்கான தற்காலிக வீசா விண்ணப்பங்களை கனடா நிராகரித்துள்ளது. மொத்தமாக 2.35 மில்லியன் தற்காலிக விசாக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது முந்தைய ஆண்டை விட 1.8 மில்லியன் நிராகரிப்புகள் அல்லது 35 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது. விசிட்டர் விசாக்கள் மிகக் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
54 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சர்வதேச ரீதியில் கோவிட் தொற்று பரவலின் பின்னர் அதிகரித்து வரும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையால் வீடுகள், சுகாதாரம் மற்றும் பொதுச் சேவைகள் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது.