• Mi.. Apr. 30th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கோடீஸ்வர யோகம் கிடைக்க!

Apr. 30, 2025

சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை நாளை தான் நாம் அட்சய திருதியை என்று கூறுகிறோம். அன்றைய நாளில் ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் அன்று புதன்கிழமை என்பதால் பலவிதமான நன்மைகளை தரக்கூடிய நாளாக அன்றைய நாள் திகழ்கிறது. பொதுவாக அட்சய திருதியை நாளன்று பல்லியை நாம் ஏதாவது ஒரு இடத்தில் பார்ப்பதன் மூலம் நம்முடைய தரித்திர நிலை முற்றிலும் நீங்கும் என்று கேள்விப்பட்டிருப்போம்.

அப்படி பல்லியை நாம் பார்க்கும் பொழுது கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். கோடீஸ்வர யோகம் கிடைக்க அட்சய திருதியை நாள் என்பது மிகவும் சிறப்பு மிகுந்த நாளாக கருதப்படுகிறது.

அன்றைய நாளில் தான் சிவபெருமான் அட்சய பாத்திரத்தை பஞ்சபாண்டவர்களுக்கு அருளினார் என்றும், பரசுராமர் அவதாரம் மேற்கொண்ட நாளாகவும், அதேசமயம் ஆதிசங்கரர் மகாலட்சுமி தாயாரை போற்றி கனகதாரா ஸ்தோத்திரம் பாடிய நாளாகவும், குசேலர் கிருஷ்ண பகவானை நேரில் பார்த்து தன்னுடைய வறுமை நிலையை மாற்றிய நாளாகவும் பலவிதமான சிறப்புகள் அன்றைய நாளில் நடந்திருக்கிறது.

அன்றைய நாளில் நாம் தெய்வங்களை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வறுமை நிலை நீங்கும் என்பதுதான் பொதுவான தாத்பரியமாக திகழ்கிறது. அதனால் தான் செல்வநிலை உயர்வதற்காகவும், சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்காகவும் அட்சய திருதியை நாளை நாம் பயன்படுத்துகிறோம்.

அன்றைய நாளில் பலரும் தங்களுடைய வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள். அதே போல் அரிசி, கல்லுப்பு, மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்ற மகாலட்சுமியின் அம்சம் நிறைந்த பொருட்களையும் வாங்குவார்கள். வசதி படைத்தவர்களோ சொந்தமாக வீடு, நிலம், வண்டி, வாகனம், தங்கம், வெள்ளி போன்றவற்றில் ஏதாவது ஒன்றையாவது வாங்குவார்கள்.

இப்படி அன்றைய நாளில் நாம் மேற்கொள்ளக்கூடிய செயல்கள் நம்மிடம் பல மடங்காக பெருகும். அதனால் யாரும் அன்றைய நாளில் கடன் வாங்க கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அப்படிப்பட்ட நாளில் பல்லியை நாம் வீட்டிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு இடத்திலோ பார்ப்பது என்பது நம்முடைய தரித்திரத்தை முற்றிலும் நீக்கும் என்று கூறப்படுகிறது. பல்லி என்பது மகாவிஷ்ணுவின் அம்சமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட பல்லியை அட்சய திருதியை நாள் அன்று நாம் பார்ப்பது என்பது மிகவும் நல்லது.

அவ்வாறு நாம் பார்க்கும் பொழுது மகாலட்சுமி தாயாரின் பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை மூன்று முறை கூறினோம் என்றால் நம் வாழ்வில் இருக்கக் கூடிய எப்பேர்பட்ட வறுமையாக இருந்தாலும் அவை முற்றிலும் நீங்கி கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed