ர்ஜென்டினா மற்றும் சிலியின் தெற்கு கடற்கரைகளில் 7.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கத்தால் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் இப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலியின் சில கடற்கரைகளில் அலை மட்டத்திலிருந்து சுமார் 3 முதல் 10 அடி உயரத்தில் சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. அந்தாட்டிகா கடற்கரையின் சில பகுதிகளுக்கு அலை மட்டத்திற்கு மேல் ஒரு மீற்றர் அல்லது அதற்கும் குறைவான அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.