டிக்டொக் செயலிக்கு 530 மில்லியன் யூரோ அபராதம் விதித்து, ஐரோப்பிய அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த பொழுதுபோக்கு செயலியான டிக்டொக் செயலி தங்கள் பயனர்களின் தரவுகள் எங்கு அனுப்பப்படுகிறது என்பது குறித்து வெளிப்படையாக இல்லை என்றுகூறி, அந்நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தனியுரிமைக் கண்காணிப்புக் குழு, 530 மில்லியன் யூரோ அபராதம் விதித்தது.
மேலும், 6 மாதங்களுக்குள் விதிகளுக்கு இணங்கவும் உத்தரவிட்டது. 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்ட இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய டிக்டொக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்தியா மற்றும் அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.