• Sa.. Mai 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்றைய ராசிபலன் – 03.05. 2025

Mai 3, 2025

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். நன்மைகள் நடக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். எதிரிகளை கூட நண்பர்களாக மாறுவார்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தொட்டதெல்லாம் வெற்றியடையும். சாதனை படைக்க கூடிய நாள். கலைஞர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நாள். தலை குனிந்த இடத்தில் கூட தலை நிமிர்ந்து நிற்பீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கும். சந்தோஷம் கிடைக்கும். –

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். அதிக வெயிலில் வெளியே செல்ல வேண்டாம். குறிப்பாக வயதானவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

கடகம்

கடக ராசி காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். தேவையான ஓய்வு கிடைக்கும். நேரத்திற்கு அந்தந்த வேலைகளை செய்து முடித்து விடுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உறவுகளோடு நேரத்தை செலவும் செய்வீர்கள். மனமகிழ்ச்சி கிடைக்கும். கணவன் மனைவி ஒருவர் ஒருவர் விட்டுக் கொடுத்து நடந்தால், வாக்குவாதம் குறையும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமங்கள் இருக்கும். தேவையற்ற சிந்தனைகள் மனதிற்கு கஷ்டத்தை கொடுக்கும். வீண் விவாதம் செய்யாதீங்க. தேவையில்லாத வேலைகளில் தலையிடாதீங்க. அன்றாட வேலையில் கூடுதல் கவனம் இருக்கட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். நல்லது நடக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் குறைய வேண்டும்.  அனுபவ சாலிகளின் பேச்சைக் கேட்டு நடக்கவும். பெரிய பெரிய செலவுகள் செய்வதாக இருந்தால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் முதலீடு செய்யும்போது கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள். –

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தை தேடும். மனது அமைதி பெறும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்‌. மேலதிகாரிகளுடைய பேச்சு கொஞ்சம் மன கசப்பை கொடுத்தாலும், பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும். வியாபாரத்தில் நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். மூன்றாவது நபரை நம்பாதீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கையை வந்து சேரும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாள் நடக்காத நல்லது ஒன்று இன்று நடக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று புதுப்புது யோசனைகள் தோன்றும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். கைநிறைய லாபம் கிடைக்கும். சின்ன சின்ன வியாபாரிகளுக்கு கூட மனசு சந்தோஷம் அடையும் படி நல்லது நடக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு மன அமைதி கிடைக்கும். தேவையற்ற டென்ஷன்கள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில், உள்ளதை உள்ளபடி பேசுவீர்கள். இதனால் தேவையற்ற எதிரிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. கவனமாக இருந்து கொள்ளுங்கள். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். புது விஷயங்களை புதுசாக கற்றுக் கொள்வீர்கள். வேலையில் உற்சாகம் பிறக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். நினைத்த படிப்பை படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். வேலையில் ஆர்வம் செலுத்த முடியாத சூழ்நிலை உண்டாகும். உடன் வேலை செய்பவர்களோடு கவனமாக பழகவும். சொந்த விஷயங்களை வெளியாட்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நிதி நிலைமை சீராகும். வண்டி வாகனம் ஓட்டும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed