நாட்டில் தற்போது ஆஸ்துமா நோயாளிகள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உலகளவில் 1,00,000 பேரில் 3,340 பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுவாச வைத்திய ஆலோசகர் டொக்டர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
உலகளவில் இளைஞர்களிடையே ஆஸ்துமா குறிப்பாக பரவலாக உள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார்.
மே 6 ஆம் திகதி உலக ஆஸ்துமா தினத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போது டொக்டர் சமரநாயக்க இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். இன்ஹேலர் அடிப்படையிலான சிகிச்சையானது பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் ஆஸ்துமாவை குணப்படுத்த முடியும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் மேலும் பேசிய சுவாச வைத்திய ஆலோசகர் மக்கள் தொகையில் ஆஸ்துமா பரவலாக இருந்தாலும், நாட்டில் பல நபர்கள் கண்டறியப்படாமல் உள்ளனர் என்று குறிப்பிட்டார்.