• Di.. Mai 6th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்றைய ராசிபலன் – 06 மே 2025

Mai 6, 2025

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானமானம், லாபம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் சந்தோஷம் பிறக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நினைத்த வேலைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த நாள் இனிமையான நாளாக அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழும் அந்தஸ்து பாராட்டு கூட கொடிய நாளாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். நிதி நிலைமை உயரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் எடுத்து செயல்படுங்கள்.

மிதுனம்.

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு இருக்கும். எல்லா வேலைகளிலும் கூடுதல் ஆர்வத்தோடு செயல்படுவீர்கள். நீண்ட நாள் தடைப்பட்டு வந்திருந்த சுப காரிய நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். சந்தோஷம் அதிகரிக்கும். கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கும்.

கடகம் .

கடக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சிரமத்திற்கு உள்ளாக வாய்ப்புகள் இருக்கிறது. பெருசாக பிரச்சனைகள் இல்லை. வேலை பளு அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் எல்லா வேலைகளையும் முடிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். உடல் சோர்வும் கொஞ்சம் இருக்கும். கூடுதல் கவனத்தோடு செயல்படுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். உடல் ஆரோக்கியத்தை பாருங்கள்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு இருக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு வியாபாரத்திலும், வேலையிலும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். வேலையில் இருந்து வந்த சிரமங்கள் குறைந்து, மன நிம்மதியை அடைவீர்கள். நிதி நிலைமையும் சீராகும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் மனது அலைபாயும். வேலையில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை உண்டாகும். எதிரிகளுடைய தொல்லை இருக்கும். சின்ன சின்ன பிரச்சனைகள் கூட பெரிய அளவில் பூதாகரமாக உருவெடுக்க வாய்ப்புகள் வரும். இருந்தாலும் நீங்கள் கொஞ்சம் எல்லா விஷயத்திலும் கவனத்தோடு இருக்கும் பட்சத்தில் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க முடியும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் இருக்கும். சோம்பேறித்தனத்திலிருந்து வெளிவந்து உங்களுடைய கடமைகளை சரிவர செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் பெயர் புகழ் கூடும். தாய்மாமன் உறவால் ஆதாயம் கிடைக்கும். உறவுகளோடு ஒற்றுமை நிலவும். சந்தோஷம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சக

ராசி காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். வீட்டில் இருப்பவர்களுடைய நலனில் அக்கறை கொள்வீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை உயர்த்தலாம். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத பகை உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. நண்பர்கள் உறவுகளோடு பேசி பழகும் போது கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களுடைய மனது புண்படும்படி நடந்து கொள்ள வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். சோம்பேறித்தனம் இருக்காது. வேலைகளை பிறகு செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் வராது. குறிப்பாக கலைஞர்களுக்கு மாணவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நிதிநிலைமை சீராகும். வரவு அதிகரிக்கும். நேர்மறையாக நிறைய விஷயங்களை சிந்திப்பீர்கள். வருமானம் பெருகும். சேமிப்பு உயரும். கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள். பிள்ளைகளுடைய எதிர்கால நலனுக்காக இன்று நீங்கள் எடுக்கும் முடிவு எதிர்காலத்திற்கு நல்ல லாபத்தை கொடுக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மறதி ஏற்படும். முக்கியமான விஷயங்களாக இருந்தால், பேப்பரில் எழுதி வைத்து அந்த வேலைகளை சரிவர முடித்து விடுங்கள். நேரத்தை அனாவசியமாக வீணடிக்காதீர்கள். கைபேசியில் அதிக நேரம் நேரத்தை செலவிட வேண்டாம். மூன்றாவது நபர்களைப் பற்றி கைநீட்டி பேசக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed