மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சாந்தமான நாளாக இருக்கும். வேலைகள் எல்லாம் அமைதியாக நடக்கும். எந்த ஆர்ப்பாட்டமும் இன்று உங்கள் வாழ்க்கையில் இருக்காது. பிரச்சனைகளுக்கு உண்டான சரியான தீர்வு கிடைக்கும். அமைதியான வாழ்க்கை, சந்தோஷமான வாழ்க்கை, மனதிற்கு இதமான வாழ்க்கையை கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். பெருசாக எந்த பிரச்சினையும் இருக்காது. வேலை வியாபாரம் எல்லாம் உங்களுக்கு தகுந்தபடி அனுசரணையாக தான் நடக்கும். உறவினர்களின் வருகை மனதிற்கு அமைதியை கொடுக்கும். உங்களுடைய குறைகளை உறவினர்களோடு பகிர்ந்து கொள்வீர்கள். பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வுகளும் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனக்கவலையான நாளாக இருக்கும். ஏதோ ஒரு சிந்தனை வேலையை சரியாக செய்ய விடாது. வீட்டிற்குள் சின்ன சின்ன சண்டைகள் வாக்குவாதம் வரவும் வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பப் பிரச்சினையை வேலையில் கொண்டு போய் கலக்க வேண்டாம். வேலை, வியாபாரத்தை தனியாக பாருங்கள். குடும்பம் சண்டையை தனியாக பாருங்கள். கடவுள் நிச்சயம் உங்களுக்கு நன்மையை செய்வான்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். உடல் அசதி நீங்கும். வேலையில் சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை முதலீட்டில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். எதிர்பாராத செலவுகள் நிதி நிலைமையை பாதிக்கும். கூடுமானவரை செலவை குறைக்க பாருங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூலாகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் மனதிருப்தியை கொடுக்கும். கடன் சுமையை குறைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள். எளிதில் ஜீரணம் ஆகும் உணவை சாப்பிடுவதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொடுக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உதவி கிடைக்கும். பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேலையில் மேலதிகாரிகளோடு இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் பெண்கள் நிதானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். பெரியவர்களோடு வாக்குவாதம் செய்யக்கூடாது. இறைவழிபாடு செய்வது மனதிற்கு நிம்மதியை தரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்கால சேமிப்புக்கு புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். புது வேலை தேடலாம். கட்டுமான தொழில், விவசாயம், கமிஷன் வேலை செய்பவர்களுக்கும் இன்று நல்ல வருமானம் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று அதிகப்படியான செலவு காத்துக் கொண்டிருக்கிறது. பர்சை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஷாப்பிங் போவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். வேளையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்தவும். குறிப்பாக கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது ஜாக்கிரதை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. யாரை நம்பியும் கடன் கொடுக்காதீர்கள். அடுத்தவர்களை பாவம் பார்த்து நீங்கள் செய்யும் உதவி கூட உங்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் நஷ்டத்தை கொண்டு வந்து சேர்த்து விடும் ஜாக்கிரதை.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். பொதுப் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலை வியாபாரம் எல்லாம் சுமூகமாக நடக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவுகளுக்குள் இருந்து வந்த விரிசல்கள் சரியாகும். மன நிம்மதியும் தூக்கமும் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலையில் நீங்கள் சாதனை படைக்க வாய்ப்புகள் இருக்கு. பெயர் புகழ் உங்களை தேடி வரும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவையான வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுடைய பெயரை நிலை நாட்ட முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். இந்த நாள் லாபமான நாளாகவும் இருக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.