• Do.. Mai 8th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இருவர் மாயம்

Mai 7, 2025

யாழ் வடமராட்சி திக்கம் கடற்பரப்பில் தொழிலுக்கு சென்ற இரு நபர்கள் கரை திரும்பாத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் (6)அதிகாலை தூண்டில் தொழிலுக்காக இரு நபர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் மாலை வரை கரை திரும்பாத நிலையில் வடமராட்சி திக்கம் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.வழமையாக தூண்டில் தொழிலுக்காக செல்லும் நபர்கள் நன்பகலுக்கு முன்னரே கரை திரும்புவது வழக்கமானது.

இதனை அறிந்த பிரதேச மக்கள் பிற்பகல் 3மணி போல் தொழிலுக்காக சென்ற படகை தேடுவதற்கு இன்னொரு படகினையும் அனுப்பினர். காணமல் போன படகை கடல் முழுவதும் தேடிய பின்னர் படகு கரை திரும்பியுள்ளமை குறிப்பிட்டதக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed