• Do.. Mai 8th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு

Mai 7, 2025

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கள்ளியடி வயல் பகுதி வெளிப்பகுதியில் வயல் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் மின்னல் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

அருமைநாயகம் யசோதரன் எனும் 42 வயது மதிக்கதக்க குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(7) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு மின்னல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குறித்த நபரை புது குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு அருகில் உள்ளவர்கள் கொண்டு வந்து சேர்த்துள்ளார்கள்.

இதனையடுத்து குறித்த குடும்பஸ்தரின் சடலம் புதுக்குடியிருப்பு பிரதேச ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் புது குடியிருப்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed