மின் ஒழுக்கு காரணமாக யாழ்ப்பாணம் – அச்சுவேலி நகரப் பகுதியில் உள்ள அழகு சாதன விற்பனை நிலையம் ஒன்று எரிந்து சேதமானது.
இச்சம்பவம் நேற்று (07.05.2025) மாலை பகுதியளவில் இடம்பெற்றுள்ளது.
விற்பனை நிலையத்தை பூட்டுவதற்கு உரிமையாளர் முயற்சி செய்த பொழுது, திடீரென விற்பனை நிலையத்தின் பின்பகுதியில் ஏற்பட்ட மின்னொழுக்கு வேகமாக பரவியது.
புகை வருவதை கண்ணுற்ற அயல் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
யாழ். மாநகர சபையின் தீயணைப்பு வாகனமும் விரைந்து வந்து நடவடிக்கைகளை மேற்கொண்டது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.