• Do.. Mai 8th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் 4 நாள் காய்ச்சல்! 21 வயது மரணம்!!

Mai 8, 2025

யாழ்ப்பாணத்தில் நான்கு  நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழந்த நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பகுதியை சேர்ந்த பரந்தாமன் லக்சன் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் கொழும்பில் உயர் படிப்பை கற்றுவரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய நிலையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார்

நான்கு நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிந்த நிலையில் , நேற்றைய தினம் புதன்கிழமை உடல்நிலை மிக மோசமான நிலையில் குடும்பத்தினர் அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இறப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed