• Do.. Mai 8th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் தாவடியில் மதம் பிடித்த யானை தாக்கி குழந்தை உட்பட 3 பேர் காயம்

Mai 8, 2025

யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் யானை தாக்கிய நிலையில் 4 வயது குழந்தை ஒன்றும் இரண்டு பெண்களும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வரும்நிலையில் திருவிழாவிற்கு யானை கொண்டுவரப்பட்டது. இதன்போது யானைக்கு மதம் பிடித்துள்ளது.

இவ்வாறு மதம் பிடித்த யானை தாக்கியதில் இரண்டு பெண்களும், ஒரு நான்கு வயது குழந்தையும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீப்பந்தங்களை எடுத்துச் சென்ற சமயம் யானை மிரண்டதில் இரு பெண்களை யானை மிதித்தில் படுகாயமடைந்துள்ளனர் இதில் ஒரு பெண்ணின் கால் பாதம் முற்றாக சேதம் ஏற்பட்டுள்ளது

இச்சம்பவம் குறித்து விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed