யாழ்ப்பாணம் அத்தியடி முருகன் ஆலயத்தின் சித்திரத்தேரின் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.
ஊருக்கு ஏழாலை எனப்பெயர் வரக்காரணமாய் இருந்த ஏழு ஆலயங்களில் அத்தியடி முருகன் ஆலயமும் ஒன்று. அவற்றில் நான்கு ஆலயங்கள் ஒரே தேரோடும் வீதியனுடன் அமைந்திருப்பது ஊருக்குப்பெருமை.
ஏலவே மூன்று ஆலயங்கள் சித்திரத்தேர்களைக்கொண்ட ஆலயங்களாய் அமைந்திருப்பது நீங்கள் அறிந்ததே. இன்று நான்காவது ஆலயமான அத்தியடி முருகன் ஆலயமும் சித்திரத்தேர் வெள்ளோடத்தைக் கண்டுள்ளமை மிகச்சிறப்பு.
விளிசிட்டி,ஏழாலை தெற்கில் வசித்தவர்களான அமரர்கள் இராசையா,சந்திரவதனா ஆகியோரின் நினைவாக அவர்கள் குடும்பத்தாரால் அமைக்கப்பட்ட சித்திரத்தேரின் வெள்ளோட்டம் இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.
