ஒரு பெண்ணினுடைய மனதில் ஆயிரம் கஷ்டம் இருக்கும். சில கஷ்டங்களை தாய் தந்தையிடம் சொல்ல முடியும், சில கஷ்டங்களை கணவரிடம் சொல்லி பகிர்ந்து கொள்ள முடியும்.
சில கஷ்டங்களை பெற்ற பிள்ளைகளிடம் சொல்ல முடியும். ஆனால் சில கஷ்டங்களை யாரிடமும் சொல்ல முடியாது. யாரிடமும் சொல்ல முடியாத கஷ்டங்களையும், அன்னை மீனாட்சி தாயிடம் சொல்ல முடியும்.
ஏனென்றால் பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாயாகத் திகழ்பவள் இந்த மீனாட்சி. நேற்றைய தினம் தான் மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண வைபவம் நடந்து முடிந்தது. மீனாட்சி தாயாரின் மனது இந்த நாளில் குளிர்ந்து இருக்கும். திருக்கல்யாண வைபவம் முடிந்த அடுத்த நாளில் நிறைந்த வெள்ளிக்கிழமை வந்திருக்கிறது.
வெள்ளிக்கிழமையான இன்று, கட்டாயம் மீனாட்சி அம்மனை நம் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்து, வழிபாடு செய்ய வேண்டும். –
புதுசாக திருமணம் ஆகி இருப்பவள் அல்லவா அவள். புது மணப்பெண்ணிடம் என்ன வரம் கேட்டாலும் உடனே கிடைக்கும். அதிலும் பெண்களுக்கு, பெண் தெய்வ வழிபாடு என்பது சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
பெண்களுடைய மனதில் இருக்கும் தீராத கஷ்டம் தீர இன்றைய தினம் மீனாட்சி அம்மனை எப்படி வழிபாடு செய்வது. மீனாட்சி அம்மன் வழிபாடு இன்று வெள்ளிக்கிழமை என்பதால் நம்முடைய வீடு சுத்தபத்தமாகத்தான் இருக்கும் மகாலட்சுமி பூஜை செய்ய பூஜை அறையில் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தயாராக இருக்கும்.
உங்களுடைய வீட்டில் மீனாட்சியின் திருவுருவப்படம் இருந்தால் அதற்கு மல்லிகை பூவை இன்று சூட்டிவிடுங்கள். வெள்ளிக்கிழமை மீனாட்சி அம்மனுக்கு மல்லிகை பூ சாற்றி வழிபாடு செய்வது என்பது மிகப்பெரிய நல்ல பலனை கொடுக்கும். –
ஒரு வெள்ளை நிற பேப்பர் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டிற்கு பச்சை நிற பேனா தான் முக்கியம். பச்சை நிற ஸ்கெட்ச் இருந்தால் கூட அதை நீங்கள் இந்த பரிகாரம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். பச்சை நிறம் மீனாட்சி அம்மனுக்கு உகந்த நிறம். அந்த வெள்ளை பேப்பரில் நான்கு பக்கமும் மஞ்சள் வைத்து விடுங்கள். ஒரு பிள்ளையார் சுழி போடுங்கள்.
குலதெய்வத்தை மனதார வேண்டி க்கொள்ளுங்கள். பேப்பரில் எழுத வேண்டிய மீனாட்சி மந்திரம் “மதுரை மீனாட்சி தாயே நீயே துணை” என்ற மந்திரத்தை அந்த பேப்பரில் 27 முறை எழுதிக் கொள்ளுங்கள். மீனாட்சியம்மனின் ஆசி உங்களுக்கு கிடைத்துவிடும். மீனாட்சி அம்மன் உங்கள் வாழ்க்கை பயணத்தில் துணையாக வந்து விடுவாள். பிறகு அந்த பேப்பரின் கீழ்ப்பக்கத்தில் உங்களுடைய மனதில் இருக்கும் பிரச்சனையை எழுதுங்கள். பெண்களுக்கு வெளியில் சொல்ல முடியாத பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கும்.
உங்களுடைய கஷ்டங்களை எல்லாம் அந்த பேப்பரில் எழுதி மடித்து, பூஜையறையில் அம்பாளின் பாதத்தில் வைத்து, மனமுருக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வழக்கம்போல வெள்ளிக்கிழமை பூஜை உங்கள் வீட்டில் எப்படி செய்வீர்களோ அதே போல பூஜை செய்யுங்கள். மீனாட்சி அம்மனுக்கு ஒரு நெய்வேதியம் மட்டும் கட்டாயம் வைக்க வேண்டும்.
அப்படி இல்லை என்றால் ஒரு டம்ளர் பானகம் வைத்து வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டை முடித்துவிட்டு இறுதியாக மீனாட்சியம்மனை நல்லபடியாக நம்பிக்கையோடு வேண்டி கற்பூர ஆரத்தை காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
பிறகு மீனாட்சி அம்மனின் மந்திர வரிகளையும் எழுதி வைத்துள்ளீர்கள் அல்லவா, அந்த பேப்பரை எடுத்து மடித்து ஒரு நோட்டு புத்தகத்திலோ அல்லது புத்தகத்திலோ வைத்து அலமாரியில் பத்திரப்படுத்தி வையுங்கள். அடுத்த 48 நாட்களுக்குள் நீங்கள் அந்த காகிதத்தில் எழுதிய நல்ல விஷயம் நிச்சயம் நடக்கும். திருமணம் நடக்க வேண்டும்.
குழந்தை பாக்கியம் பெற வேண்டும். கணவர் கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும். பிள்ளைகள் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும். குடும்பத்தில் இருக்கும் பணக்கஷ்டம் தீர வேண்டும் அல்லது உடல் பாதைகள் ஏதேனும் இருந்தால் அந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று என்ன கோரிக்கையாக இருந்தாலும் நீங்கள் அந்த அம்பாளிடம் வைக்கலாம்.
இது தவிர பெண்களுக்கு வெளியில் சொல்ல முடியாத கஷ்டம் எவ்வளவோ இருக்கு. நீங்க என்ன சொன்னாலும் அதை அம்பாள் தன்னுடைய செவிகளில் வாங்கிக்கொண்டு, அந்த பிரச்சனைக்கு உண்டான தீர்வை 48 நாட்களில் கொடுத்து விடுவாள். 48 நாள் கழித்து அந்த காகிதத்தை நெருப்பில் பொசுக்கி தண்ணீரில் கரைத்து கீழே ஊற்றி விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: கிரக தோஷத்தை நீக்கும் அக்னி நட்சத்திர பரிகாரம் வேண்டுதல் நிறைவேறினாலும் சரி, நிறைவேறவில்லை என்றாலும் சரி அந்த காகிதத்தை வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டாம்.