• Mo.. Mai 12th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ். கோப்பாய் வைத்தியசாலை ஊழியர் உயிரிழப்பு..!

Mai 12, 2025

கோப்பாய் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர் (11) வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். நீர்வேலி – பூதர்மட ஒழுங்கை என்ற முகவரியைச் சேர்ந்த குணரத்தினம் குணாதரன் (வயது 41) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் இன்றையதினம் வாந்தி எடுத்துள்ளார். இந்நிலையில் உறவினர்கள் அவரை கோப்பாய் வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இதய நோய் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed