கொத்மலை – இறம்பொடையில் இடம்பெற்ற வேன் விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
நுவரெலியாவிலிருந்து அனுராதபுரம் ராஜாங்கனை நோக்கி பயணித்த வேன், கொத்மலை பஸ் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகிலுள்ள புளும்பீல்ட் தோட்ட பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் திரும்பி செல்லும் வழியிலேயே குறித்த வேன், வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் குறித்த வேன் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.