• Mi.. Mai 14th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் தண்ணீர் தாங்கியை அடித்து நொருக்கிய விசமிகள்

Mai 14, 2025

ழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டு கழக மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தாங்கி விஷமிகளால் அடித்து நொருக்கபட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

துயர் பகிர்தல் .செல்வி. தவராசா டிலக்சி (சிறுப்பிட்டி,13.05.2025)

இது குறித்து மேலும் தெரியவருவதாவது 

சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டு கழகத்தின் மைதானத்தில் புலம்பெயர் தேச உறவுகளின் நிதிப் பங்களிப்புடன் பசுமை புரட்சி திட்டத்தின் கீழ் குடி நீர் வழங்குமுகமாக நீர்தாங்கி ஒன்று அமைக்கபட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த நீர் தாங்கி விஷமிகளால் தாக்கப்பட்டு உடைக்கபட்டுள்ளது. 

இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதவு செய்யபட்டுள்ள நிலையில் பலருக்கு பயன்தரு முகமாக அமைக்கப்பட்ட குறித்த திட்டத்தினை சேதப்படுத்தியமை தொடர்பில் பொதுமக்கள் தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed