தமிழகம் சிவகாசியை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் துபாயில் வேலை பாரத்து வந்த நிலையில் அவருக்கு அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் கோடிக்கணக்கான பணம் விழுந்தமை அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அத்துடன் இந்த பணத்தை அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தனது திருமண செலவிற்கு பயன்படுத்த போவதாகவும் தெரிவித்துள்ளார்.
துபாயில் கணக்காளராக பணிபுரிந்து வருபவரான ஆனந்த் பெருமாள்சாமி (வயது 33).என்பவருக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது.
குழுவாக சேர்ந்து வாங்க முடிவு
இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமீரகத்தில் அறிமுக செய்யப்பட்ட லொட்டரியை வாங்க முடிவு செய்தார். ஒரு லொட்டரி டிக்கெட் விலை அதிகம் என்பதால், இதற்காக அவரது தமிழக நண்பர் பாலமுருகனுடன் சேர்த்து 12 பேர் கொண்ட குழுவை உருவாக்கினார்.
பின்னர் அவர் மாதத்திற்கு 2 லொட்டரி டிக்கெட்களை குழுவாக சேர்ந்து வாங்கி உள்ளார். 15 நாட்களுக்கு ஒருமுறை லாட்டரி டிக்கெட்டை வாங்கி குலுக்கலை நேரலையில் பார்த்து வந்துள்ளனர். மேலும் ஆனந்த் செயலியிலும் குலுக்கல் முடிவுகளை கண்காணித்து வந்தார்.
இந்த நிலையில் ஆனந்த் இரவு தூங்க செல்லும் முன்பு செயலியை பார்த்தபோது இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார். அதில் இவர்கள் குழுவாக வாங்கிய லொட்டரிக்கு 10 லட்சம் திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 32 லட்சம்) பரிசுத்தொகை இவரது பெயருக்கு விழுந்துள்ளது.
