• Fr.. Mai 23rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கைதடி முதியோர் இல்லம் முன்பாக விபத்து! முதியவர் ஒருவர் பலி!

Mai 21, 2025

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடிப் பகுதியில் முதியோர் இல்லம் முன்பாக 20/05 செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த மேற்படி முதியவர் ஐந்து நாள் விடுமுறையில் தனது சொந்த இடமான வண்ணார்பண்ணைக்கு செல்ல ஆயத்தமாகிய போதே யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

79வயதான சச்சிதானந்தம் என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.முதியவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed