• Mi.. Mai 21st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புதிய கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான தகவல்

Mai 21, 2025

ஒருநாள் சேவையில் நாளொன்றுக்கு 4000 அளவிலான வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுகின்றன. கடவுச்சீட்டுக்களின் செல்லுபடி காலம் நீட்டிக்கப்படமாட்டாது.

யாழில் கிருமித் தொற்றினால் இளம் தவில் வித்துவான் பலி

செல்லுபடிகாலம் நிறைவடைந்ததும் விண்ணப்பதாரி புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற அமர்வில் வாய் விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இன்றைய இராசிபலன்கள் (21.05.2025)

புதிதாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்கு நாளொன்றுக்கு 3000 அளவிலான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறுகின்றன. இதற்கமைய புதிய கடவுச்சீட்டுகளுக்கான இன்றளவில் 356,714 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஒருநாள் சேவையில் நாளொன்றுக்கு 4000 அளவிலான வெளிநாட்டு கடவுச் சீட்டுக்கள் விநியோகிக்கப்படுகின்றன. கடவுச் சீட்டுக்களின் செல்லுபடி காலம் நீட்டிக்கப்பட மாட்டாது.

கைதடி முதியோர் இல்லம் முன்பாக விபத்து! முதியவர் ஒருவர் பலி!

செல்லுபடி காலம் நிறைவடைந்ததும் விண்ணப்பதாரி புதிய கடவுச்சீ

நாங்கள் ஆட்சிக்கு வரும் போது ஒருநாள் சேவையில் 1200 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்பட்டன.

ஆனால் தற்போது 4000 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுகின்றன. கடவுச்சீட்டு விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது ஆகவே ஒரு வரையறையில் இருந்துக் கொண்டு தான் செயற்பட முடியும்.ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளமைக்கு கடந்த அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.

இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகத்துக்கான விலைமனுக்கோரல் விடுக்கப்பட்டுள்ளது. ஆகவே வெளிநாட்டு கடவுச்சீட்டு நெருக்கடிக்கு வெகுவிரைவில் சிறந்த தீர்வு எட்டப்படும் என்றார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed