• Do.. Mai 22nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

முல்லைத்தீவில் மாட்டுடன் மோதி ஒருவர் பலி!! ஒருவர் படுகாயம்!

Mai 22, 2025

உடையார் கட்டு  சுதந்திரபுரம் சந்திக்கு அருகில் புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் கம்பளை பகுதியினை சேர்ந்த 45 அகவையுடைய சிரிர விஜயரத்தின என்பவர் உயிரிழந்துள்ளதுடன் வெள்ளப்பள்ளம் சுதந்திரபுரத்தினை சேர்ந்த 24 அகவையுடை இளைஞன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி மேலும்  தெரியவருகையில் கடந்த 18.05.2025 அன்று இரவு 7.30 மணியளவில் உந்துருளி ஒன்றில் மூவர் பயணித்துள்ளார்கள் இதன்போது வீதியில் நின்ற கால்நடை ஒன்றுடன் உந்துருளி மோதி விபத்தினை சந்தித்துள்ளார்கள்.

விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிலை ஓட்டிச்சென்ற வெள்ளப்பள்ளத்தினை சேர்ந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த இளைஞன் மேலதிக  சிகிச்சைக்காக யாழ்போதான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தவர்களே இந்த விபத்தினை சந்தித்துள்ளார்கள்.விபத்துதொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed