23-5-2025 வைகாசி மாதத்தின் தேய்பிறை ஏகாதசி திதியானது வரவிருக்கிறது. இந்த ஏகாதசிக்கு வருதினி ஏகாதசி என்று பெயர். நாளைய தினம் எவரொருவர் பெருமாளை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்கிறீர்களோ, அவர்களுக்கு மகாலட்சுமியின் பரிபூரண ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அது மட்டும் அல்லாமல் மார்கழி மாதத்தில் வரவிருக்கும் வைகுண்ட ஏகாதசிக்கு பெருமாளை வழிபாடு செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அதே புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும், நாளைய தினம் பெருமாளை வழிபாடு செய்யும்போது. இதோடு மட்டுமா. இந்த நாளில் சனி பகவானுக்கு உரிய உத்திராட நட்சத்திரமும் இருக்கிறது.
சுக்கிரனுக்கு உரிய வெள்ளிக்கிழமை தினத்தில், இந்த ஏகாதேசி வந்திருப்பது அதி சிறப்பு. சனி பகவானால் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் நீங்க வேண்டும் என்றாலும், நாளைய தினம் நீங்கள் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.
நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு பெருமாளை நினைத்து விரதத்தை துவங்குங்கள். விரதம் இருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தது. நாளை மாலை கட்டாயம் இந்த இரண்டு இலைகளை உங்கள் வீட்டிற்கு எடுத்து வர வேண்டும்.
முதலில் பெருமாள் மகாலட்சுமிக்கு உரிய துளசி இலை, அடுத்தபடியாக குபேரருக்கு சொந்தமான நெல்லி மரத்து இலைகள். இரண்டு இலைகளையும் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
பெருமாளுக்கு மகாலட்சுமிக்கு வாசனை நிறைந்த பூக்கள் துளசி இலைகளால் அலங்காரம் செய்துவிட்டு, ஒரு சின்ன தட்டில் நெல்லி மரத்து இலைகளை பரப்பி அதன் நடுவே ஒரு மண் அகல் விளக்கு வைத்து, தீபம் ஏற்றி பெருமாளை மனமுருகப் பிரார்த்தனை செய்து “ஓம் நமோ நாராயணா” கோவிந்தா கோவிந்தா கோவிந்தா! என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபாட்டை மேற்கொண்டாலே போதும்.
உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் பெரிய பெரிய துன்பங்கள் கூட சர்வசாதாரணமாக உங்களை விட்டு விலகிவிடும். நாளை மாலை 6 மணிக்கு இந்த எளிமையான பூஜையை உங்கள் வீட்டிலேயே செய்யலாம்.
முடிந்தால் நாளை வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளையும் மகாலட்சுமியையும் தரிசனம் செய்து, அந்த கோவிலில் இருந்து கொஞ்சம் துளசி இலை, கொஞ்சம் தீர்த்தத்தை கொண்டு வந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வையுங்கள்
வீட்டில் இருக்கும் தரித்திரம் முழுமையாக நீங்கிவிடும். நாளைய தினம் வரக்கூடிய ஏகாதசி திதி, நாளை மாலை அதாவது வெள்ளிக்கிழமை மாலை 6:45 மணி வரை மட்டுமே இருக்கிறது. ஆகவே உங்களுடைய வழிபாட்டு முறைகளை இந்த நேரத்திற்குள் நீங்கள் நிறைவு செய்து கொள்ளுங்கள்.