ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று இரவு 11.00 மணி வரை , 21 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் 04 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.