ஜேர்மனியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் ஜேர்மனியில் ஹம்பர்க் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தொடருந்துக்காக காத்துக்கொண்டு இருந்தவர்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் 12 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், மூன்று பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கத்தியால் தாக்கிய நபரை அங்கு இருந்த காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
கத்தி குத்து தாக்குதல் நடத்தியவரின் நோக்கம் குறித்தும் அவரது பின்னணி குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.