• Fr.. Mai 30th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உணவு ஒவ்வாமையால் 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Mai 28, 2025
Hospital glass building. Mirrored sky and city on modern facade. Health, clinic, emergency, healthcare and medical concept in 3D rendering illustration.

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று (28) மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பாடசாலையின் ஒரே வகுப்பைச் சேர்ந்த 21 மாணவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக 10 மாணவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு சுகாதார பரிசோதர்கள் உணவின் மாதிரியை பெற்றுச் சென்றுள்ளனர்.

இருப்பினும் ஏனைய வகுப்பு சேர்ந்த எந்த ஒரு மாணவர்களுக்கும் உணவு ஒவ்வாமை ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed