• Do.. Mai 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மின்சாரம் தாக்கி 3 பிள்ளைகளின் தாய் மரணம்

Sep. 3, 2023

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர பகுதியில் விவசாய காணியில் காப்புக்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை நிகழ்ந்துள்ளது. இவ்வாறு இறந்தவர் 3 பிள்ளைகளின் தாயான 45 வயதுடைய மைக்கல் எக்லஸ் என தெரிய வந்துள்ளது. 

தனது விவசாய தோட்டத்திற்கு மரக்கறி வகைகளுக்கு நீர் பாய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த மின்சார கம்பியினை அப்புறப்படுத்த முயற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருவதோடு, சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed