• Do.. Mai 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்தியாவில் ஆன்மிக நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலி!

Juli 2, 2024

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று இடம்பெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 100இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மைதானத்தில் கண் கலங்கிய ரொனால்டோ.

கூட்ட நெரிசலில் சிக்கி பலத்த காயமடைந்த பெண்கள், குழந்தைகள் உட்பட்ட பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் இன்று இந்து மத சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கரவெட்டியைச் சேர்ந்த இளம் தாய் பிரித்தானியாவில் திடீர் மரணம்!

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

இந்தநிலையில் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும்போதே நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது பலர் சனநெரிசலில் கீழே வீழ்ந்து நசுக்குண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள், உட்பட பலர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed