வத்தளை – எலகந்த பகுதியில் அமைந்துள்ள கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது இன்று காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
எலகந்த பகுதியில் அமைந்துள்ள கால்வாயில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- யாழில் வீதியால் சென்றவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
- யாழில் சிக்கிய கேரள கஞ்சா ! மூவர் கைது
- எரிபொருள் விலைகளில் மாற்றம்- வௌியான அறிவிப்பு!
- இன்றைய இராசிபலன்கள் (01.05.2025)
- வியாழன் சதுர்த்தி விரதம்