யாழில், கணவாய் பிடிப்பதற்கு கடலுக்கு சென்றவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதன் போது காக்கைதீவு, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கனகராசா சுரேஷ்குமார் (வயது 39) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் உட்பட சக தொழிலாளர்கள் என 5 பேர் கணவாய் பிடிப்பதற்கு, கடலினுள் தடி நடுவதற்காக படகினில் சென்றனர்.
இதன்போது குறித்த நபர் திடீரென மயக்கமடைந்தார்.
இந்நிலையில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மாரடைப்பினால் மரணம் சம்பவித்ததாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்
- யாழ் வடமராட்சி இளைஞன் பிரான்ஸில் தற்கொலை!
- இன்றைய இராசிபலன்கள் (30.04.2025)