• So. Apr 28th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

500 கர்ப்பிணிகளுக்கு கொவிட் தொற்று.

Feb 1, 2022

நாட்டில் தற்போது 500 கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில தினங்களாக கர்ப்பிணிகள் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரித்து வருவதால் மூன்றாம் கட்ட தடுப்பூசியை தாமதமின்றி பெற்றுக் கொள்வதாக விசேட வைத்திய நிபுணர் சித்திரமாலி டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அண்மைய தினங்களாக கர்பிணிகள் கொவிட் தொற்றுக்குள்ளாகும் வீதம் சடுதியாக அதிகரித்து வருகிறது.

தற்போது 500 கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் மூன்றாம் கட்ட தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதில் அவர்கள் ஆர்வம் செலுத்துவது குறைவாகவுள்ளது.

கடந்த கொவிட் அலைகளின் போது தடுப்பூசியின் ஊடாகவே கர்ப்பிணிகள் தொற்றுக்கு உள்ளானாலும் , மரணிக்காமல் பாதுகாக்கக் கூடியதாக இருந்தது.

தற்போது ஒமிக்ரோன் வைரசும் காணப்படுவதால் மூன்றாம் கட்ட தடுப்பூசியை தவிர்ப்பது பாதுகாப்பானதல்ல. எனவே அந்தந்த பிரதேசங்களிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளுக்குச் சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு கர்பிணிகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என்றார்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed