கனடாவில் (Canada) இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.கனடாவின் – ஒன்டாரியோ(Ontario) மாகாணத்தில் உள்ள டொரன்டோ நகரில் கடந்த வியாழக்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொரன்டோ நகரில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பில் மோதியுள்ளது.இந்நிலையில், கம்பத்தில் மோதிய வேகத்தில் கார் தீப்பற்றி எரிந்துள்ளது. இதன்போது காரில் இருந்த 4 இந்தியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஒன்டாரியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்தில், பலத்த காயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்படி விபத்தில் உயிரிழந்தத இந்தியர்களுக்கு டொரன்டோவில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்
- யாழ் வடமராட்சி இளைஞன் பிரான்ஸில் தற்கொலை!
- இன்றைய இராசிபலன்கள் (30.04.2025)