ஒவ்வொரு மாதமும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான கிரகங்களின் ஆட்சி என்பது இருக்கும். அதன் வகையில் மே மாதம் என்பது சூரிய பகவானுக்குரிய மாதமாக திகழ்கிறது.
விடுமுறையில் சுற்றுலா சென்ற இரு இளைஞர்கள் மாயம்
அப்படிப்பட்ட மாதத்தில் சூரிய பகவானை நாம் முழுமனதோடு வழிபாடு செய்வதன் மூலம் அந்த மாதமே சிறப்பான மாதமாக அமையும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் மே மாதம் முழுவதும் சிறப்பான மாதமாக திகழ்வதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மே மாதம் சிறப்பான மாதமாக அமைய எந்த ஒரு கிரகத்தை வழிபாடு செய்வதாக இருந்தாலும் தெய்வத்தை வழிபாடு செய்வதாக இருந்தாலும் சாதாரணமாக வழிபாடு செய்வதை விட அவர்களுக்குரிய மந்திரத்தை கூறி வழிபாடு செய்யும்பொழுது அந்த வழிபாட்டின் பலனை நம்மால் விரைவிலேயே பெற முடியும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் சூரிய பகவானின் ஆதிக்கம் நிறைந்த மே மாதத்தில் அனைத்தும் நன்மைகளாக நடைபெறுவதற்கு சூரிய பகவானை கண்டிப்பான முறையில் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்யும்பொழுது சூரிய பகவானுக்குரிய எளிமையான மந்திரங்களை கூறி வழிபாடு செய்தோம் என்றால் சூரிய பகவானின் அருளை நம்மால் பெற முடியும்.
சூரியனின் தாக்கம் அதிகமாக இருக்கக் கூடிய மாதமாக தான் மே மாதம் திகழ்கிறது. அதிலும் அக்னி நட்சத்திரம் என்று கூறக்கூடிய சூரிய பகவானின் தாக்கம் அதிகரிக்க கூடிய நாட்களும் இந்த மே மாதத்தில் தான் வருகிறது.
உஷ்ணம் நிறைந்த இந்த மே மாதத்தில் சூரிய பகவானை நாம் முழுமனதோடு வழிபாடு செய்யும்பொழுது சூரிய பகவானால் ஏற்படக்கூடிய நன்மைகள் அனைத்தையும் நம்மால் பெற முடியும்.
அதிலும் குறிப்பாக வேலை தொடர்பான வேண்டுதல்களும் உடல் ஆரோக்கியம் தொடர்பான வேண்டுதல்களும் விரைவில் நிறைவேறும் என்று கூறலாம். இந்த மந்திரத்தை மே மாதம் முதல் நாளில் இருந்து மே மாதம் இறுதி நாள் வரை நாம் தினமும் கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கூறலாம். அதிலும் குறிப்பாக சூரிய உதயம் ஆகக்கூடிய நேரத்தில் நாம் கூறுவது என்பது மிகவும் சிறப்பு. அதிலும் குறிப்பாக காலையில் ஐந்து முப்பது மணியிலிருந்து ஆறு முப்பது மணிக்குள் இந்த மந்திரத்தை சூரிய பகவானை பார்த்தவாறு கூறுவது என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த மாதம் முடிவதற்குள் 5555 முறை இந்த மந்திரத்தை நாம் கூறினோம் என்றால் அந்த மாதம் முழுவதும் நமக்கு சிறப்பான மாதமாக அமையும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஒரு நாளைக்கு நாம் குறைந்தது 180 முறையாவது இந்த மந்திரத்தை கூற வேண்டும்.
முழு மனதோடு சூரிய பகவானை பார்த்தவாறு சுத்தமாக குளித்து முடித்துவிட்டு இந்த மந்திரத்தை கூறினால் போதும் வேறு எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மந்திரம் “ஓம் ஆதித்யாய நமோ நம”
எளிமையான இந்த மந்திரத்தை முழுமனதோடு மே மாதம் முழுவதும் தொடர்ச்சியாக கூறுவதன் மூலம் சூரிய பகவானின் பரிபூரணமான அருளை பெற்று சிறப்பான மாதமாக இந்த மாதத்தை மாற்ற முடியும்