கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க விமான நிலைய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மாத்தறை, துடாவா பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய இந்த பயணி, இத்தாலியில் பணிபுரிந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பயணியின் பொருட்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மதுபான போத்தல்கள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இது குறித்து சுங்க அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, பயணி கைது செய்யப்பட்டார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 344 இன் கீழ் கடமையைச் செய்வதற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் விமானப் பயணியை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.