• Sa.. Mai 10th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பலி

Mai 10, 2025

கனடாவில் நண்பர்களுடன் சென்ற இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஒன்டாரியோ ஸ்காபுரோ பகுதியை சேர்ந்த 19 வயதான ரதுஷன் ராஜ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் இந்த துயர சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞனின் பெற்றோர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களாகும்.

Bancroft பகுதியில் ஏரியில் சடலம் ஒன்று மிதப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மீட்பு குழுவினர் அந்தப் பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதன்போது படகில் இருந்த இருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்ததாகவும் ஒருவர் நீரில் விழுந்து மூழ்கியதாக சந்தேகப்பட்டதாகவும் அவசர உதவி குழுவினர் தெரிவித்தனர்.

நீருக்கடியில் தேடிய மீட்பு பிரிவினர் சடலம் ஒன்றை கண்டுபிடித்த நிலையில், அது படகின் மூன்றாவது இளைஞன் என்பதை உறுதிப்படுத்தினர்.

இந்தச் சம்பவத்தின் போது உயிரிழந்த இளைஞன் உயிர்க்காப்பு அங்கி (life jacket) அணிந்திருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed