• Di.. Mai 13th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

Mai 13, 2025

நாட்டின் பல பகுதிகளில் இன்று (13) மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் இன்று மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், வயோதிபர்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளர்கள் குறித்தும் மிகுந்த அவதானம் செலுத்துமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed