• Fr.. Mai 16th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் முதியவரை பராமரித்தவர் நகைகள் , பணத்துடன் ஓட்டம்

Mai 15, 2025

 யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு – 06ஆம் வட்டாரம் பகுதியில் நகைகள், யூரோக்கள் மற்றும் பணம் என்பன களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மட்டக்களப்பை சேர்ந்த குறித்த சந்தேகநபர் மண்டைதீவு முதியவரின் வீட்டில் தங்கியிருந்து அங்கிருந்த முதியவர் ஒருவரை பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதியவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து நேற்றையதினம் அந்த வீட்டுக்கு சென்ற சந்தேகநபர், மூன்றரை பவுண் நகைகள், 3 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 700 பிரான்ஸ் யூரோக்கள் என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் ஊர்காவற்துறை பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed