• Sa.. Mai 17th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஹட்டன் பகுதியில் 50 அடி பள்ளத்தில் விழுந்த வாகனம்

Mai 16, 2025

ஹட்டன் பகுதியில் கெப் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து இன்று (16) அதிகாலை 4 மணியளவில் ஹட்டன் (Hatton) – ஸ்த்ராடன் தோட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஹட்டன் பகுதியில் உள்ள தோட்டங்களில் இருந்து ஆணைக் கொய்யா பழங்களை வாங்கி கொழும்புக்கு விற்பனைக்காக கொண்டு செல்லும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் கெப் வாகனத்தின் சாரதியும் அதில் பயணித்தவர்களில் ஒருவரும் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற போது கெப் வாகனத்தில் நான்கு பேர் பயணித்ததாக விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed