நடுத்தர வர்க்க மக்களுக்கு கனடா (Canada) அரசு பாரிய வரிச்சலுகையை அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, 2025 ஜூலை முதலாம் திகதி முதல் குறைந்த வரி விகிதத்தை 15 சதவீதத்திலிருந்து இலிருந்து 14 சதவீதமாக குறைப்பதாக கனேடிய அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் இரண்டு வருமானம் உள்ள குடும்பங்கள் ஆண்டுக்கு அதிகபட்சம் 840 கனேடிய டொலர் வரை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிவிலக்கு திட்டம், 2025 தொடக்கம் 26 ஆம் ஆண்டில் தொடங்கி ஐந்து ஆண்டுகளில் 27 பில்லியன் டொலர் மதிப்புள்ள வரி சுமையை குறைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான முழு ஆண்டு வரி விகிதம் 14.5 சதவீதமாக இருக்கும் எனவும் 2026 முதல் 14 சதவீதமாக நிலைத்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தால், 57,375 டொலருக்கும் குறைவான வருமானம் உள்ளவர்களும், 114,750 டொலர் வரை வருமானம் உள்ளவர்களும் பெரிதும் பயனடைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தேோடு, கனடா வருமான வரித்துறை (CRA), 2025 ஜூலை டிசம்பர் மாதங்களுக்கான புதிய வரி விலக்கு பட்டியலை வெளியிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஊதியத்திலேயே குறைந்த அளவு வரி பிடித்தம் செய்யப்படும்.
எனவும், இல்லையெனில் 2025 ஆண்டுக்கான வரி தாக்கல் செய்யும்போது இந்த வரிவிலக்கு அனுபவிக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள வரி பிரச்சினைக்கு தீர்வாக, கனடா அரசு வாகன உற்பத்தியாளர்கள், உணவுப் பொருள் பாக்கேஜிங் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான அமெரிக்க இறக்குமதிகளுக்கு ஆறு மாத தற்காலிக வரி விலக்கை அறிவித்துள்ளது.
இது கனடாவில் வாழும் தொழில் முனைவோர்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.