• Fr.. Mai 23rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாடு திரும்பிய யாழ்.குயில் பிரியங்கா; விமான நிலையத்தில் வரவேற்பு

Mai 22, 2025

இந்தியாவில் இருந்து சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பங்குபற்றிய சிந்து மயூரன் – பிரியங்கா இன்றையதினம் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார்.

இன்று மதியம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பிரியங்காவுக்கு ஏராளமான மக்கள் ஒன்றுகூடி தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிந்து மயூரன் பிரியங்கா இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 போட்டியில் பங்குபற்றியிருந்தார்.

இந்தநிலையில், விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் – 10 போட்டியாளர்கள் தெரிவில் கலந்து கொண்டு அவரும் போட்டியில் உள்வாங்கப்பட்டிருந்தார்.

போட்டியில் பங்குபற்றி பிரியங்கா நடுவர்கள் உட்பட பலரது பாராட்டினையும் பெற்றிருந்தார். இந்நிலையில் அவரது பாடல் சுற்றானது நிறைவடைந்த நிலையில் அவர் இன்றையதினம் மீண்டும் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.  

நாடு திரும்பிய யாழ்.குயில் பிரியங்கா; விமான நிலையத்தில் அமோக வரவேற்பு | Sindhu Mauryan Priyanka Super Singer Vijay Tv
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed