• Sa.. Mai 24th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

விமானநிலையத்தில் இளைஞன் கைது ; சோதனையில் சிக்கிய பொருட்கள்

Mai 23, 2025

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 35 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் யட்டியாந்தோட்டைப் பகுதியில் வசிக்கும் 21 வயதுடையவர் ஆவார்.

விமான நிலைய சோதனைகள் அனைத்தையும் முடித்துவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவரின் பயணப்பொதிகளில் இருந்து 20,000 „பிளாட்டினம்“ சிகரெட்டுகள் மற்றும் 3,600 „மான்செஸ்டர்“ சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன

கைதுசெய்யப்பட்ட பயணியையும் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed