• So.. Mai 25th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மியான்மர் அகதிகள் படகுகள் கவிழ்ந்ததில் 427 பேர் பலி !

Mai 24, 2025

மியான்மர் அகதிகளை ஏற்றிச்சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் 427 பேர் உயிரிழந்துள்ளனர்.

மியான்மரில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து ரோகிங்கியோ மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இவ்வாறு அகதிகளாக இந்தோனேசியாவிற்கு செல்ல முயற்சித்த அகதிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக, பங்களாதேஷில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட ரோகிங்கியோக்கள் அதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இவ்வாறு தஞ்சமடைந்த அதிகள் இந்தோனேசியாவுக்கு செல்ல முயற்சித்தபோதே விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துக்கள் கடந்த 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பங்காளதேஷின் கோக்ஸ் பசார் அகதிகள் முகாமில் வசித்து வந்த ரோகிங்கியோக்களில் 267 பேர் படகு மூலம் இந்தோனேசியாவுக்கு செல்ல முயற்சித்துள்ளனர்.

அப்போது அவர்கள் சென்ற படகு மியான்மர் கடற்பகுதியில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 201 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 66 பேர் காப்பற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

அதற்கு அடுத்த நாளான 10ஆம் திகதி 247 ரோகிங்கியோ அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற மற்றொரு படகு கடலில் கவிழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், 226 பேர் உயிரிழந்ததோடு, 21 பேர் காப்பற்றப்பட்டுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed