• Fr.. Mai 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Juli 8, 2022

யாழில்  ஐஸ் போதைப்பொருளை உடமையில் கொண்டு சென்ற ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம்   மானிப்பாய் வீதி சத்திரச்சந்திக்கு அண்மையில் வைத்து இன்று மாலை குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

யாழ்பாணம் குருநகர் ஐந்துமாடி பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யபட்டார்.

ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed