• Sa.. Mai 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் மீண்டும் அதிகரிக்கும் கொராணா தொற்று

Juli 14, 2022

யாழில் நேற்றையதினம் இருவருக்கு கொராணா தொற்று உறுதியானதையடுத்து பொதுமக்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அல்லாரை மற்றும் கைதடிப் பகுதியிலேயே இவ்வாறு கொராணா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனையில் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடத்து இருவரையும் வீடுகளில் தனிமைபடுத்தியுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் இடம்பெற்று இருக்கின்ற பொருளாதார சிக்கலின் காரணமாக ஏனையோர் புகையிரதம் மற்றும் பேருந்தில் கடும் நெரிசலுக்கு மத்தியில் பயணிக்கின்றனர்.

அதனால் தொற்று அதிகரிக்ககூடும் என எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed