• So.. Mai 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

5000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல் 

Nov. 22, 2022

குறைந்த வருமானம் பெறுவோர்களுக்கான அறிவித்தல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது அவர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு குறைக்கவோ அல்லது இரத்து செய்யவோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் நேற்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசங்களில் இதற்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், இந்த கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதிக்கு இந்த கொடுப்பனவுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed