• Di.. Mai 13th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

2023 புத்தாண்டை வரவேற்ற உலகின் முதல் நாடான நியூசிலாந்து 

Jan. 1, 2023

உலகின் முதல் நாடாக, நியூசிலாந்து 2023 புத்தாண்டை வரவேற்றுள்ளது.

கிரிபட்டி உள்ளிட்ட பசுபிக் வலைய தீவுகளில் இலங்கை நேரப்படி, 3.30க்கு 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகின் கிழக்கு திசையில் அவுஸ்திரேலியா, ஓசியானா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து உலகில் சூரியன் உதிக்கும் முதல் நாடாக உள்ளது.

இதன்படி, இலங்கை நேரப்படி பிற்பகல் 4.30க்கு நியூஸிலாந்தில் நள்ளிரவு 12 மணியானதும், அந்த நாட்டு மக்கள் புத்தாண்டை வரவேற்றதுடன், கொண்டாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed